தென்காசி எம்பி. , ராணி ஸ்ரீ குமார் அமைச்சரிடம் வாழ்த்து

60பார்த்தது
தென்காசி எம்பி. , ராணி ஸ்ரீ குமார் அமைச்சரிடம் வாழ்த்து
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆன டாக்டர் ராணி ஸ்ரீகுமார் நேற்று தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரனை சென்னை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் செல்லத்துரை, ஆறுமுகச்சாமி, மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ், திமுக ஒன்றிய செயலாளர்கள் மகேஷ்மாயவன், ஜெயக்குமார், சுரேஷ், கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான்,

சுரண்டை நகரச் செயலாளர் கணேசன், விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் முருகன், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ஐவேந்திரன் தினேஷ், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், ஐடி விங் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி