தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை அருள்மிகு இளமலை ராமர் கோவில் கொடை திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது.
முதல் நாள் இரவு மாகாப்பு அலங்காரம், மாவிளக்கு பூஜை வழிபாடு, இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இரண்டாம் நாள் பால் குட ஊர்வலம், மாலையில் குற்றாலத்தில் இருந்து புனித நீர் ஊர்வலமாக எடுத்துச் செல்லுதல், சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதம் நடைபெற்றது. கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
மூன்றாம் நாளான நேற்று அதிகாலையில் சப்பர வீதி உலா நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் சிறப்பு பூஜை வழிபாட்டுடன் கொடை திருவிழா நிறைவு பெற்றது.
ஏற்பாடுகளை ஊர் நாட்டாண்மை அழகு சுந்தரம் தலைமையில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.