முன்னாள் தென்காசி மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர் செல்வத்தை நேற்று தலைமைச் செயலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: -
தென்காசி மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் தென்காசி மாவட்டம் 5 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும் மேலும் தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டு அமைந்துள்ள பசுமை வாய்ந்த விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டம் ஆகும்.
புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டம் என்பதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிதாக மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம் போன்ற பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவித்து அதை நமது அரசு நிறைவேற்றி தந்துள்ளது .
விரைவில் தென்காசி மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரியும் அமைய இருக்கிறது. கழக தேர்தல் அறிக்கையில் ஆயிரப்பேரியில் அரசு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது ஆயிரப்பேரியில் உள்ள இடத்தில் ஆயுதப்படை காவல் பயிற்சி நிலையம் அமைய உள்ளது.
எனவே, பாட்டாக்குறிச்சி பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைத்து தர வேண்டும் என்று அவர் அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.