தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை அடையாறு சாஸ்திரி நகரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டம், வீரகேரளம் புதூர் வட்டத்திற்குட்பட்ட கீழக்கலங்கல் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து கீழக்கலங்கல் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர், தென்காசி எம்பி ராணிஸ்ரீகுமார், எம்எல்ஏக்கள் பழனி நாடார், ராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி பார்வையிட்டனர்.