தென்காசி: காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி

53பார்த்தது
தென்காசி: காவலரின் குடும்பத்திற்கு நிதியுதவி
உடல்நலக்குறைவால் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு 2017 பேட்ச் காவலர்கள் இணைந்து உதவி தொகை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டம், தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிய குலசேகரன் கோட்டையை சேர்ந்த காவலர் பசுபதிமாரி கடந்த 06/08/2024 அன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இந்நிலையில் அவருடன் பணியில் சேர்ந்து தமிழக காவல்துறையில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர்கள் 2017- பேட்ச் காக்கும் உறவுகள் குழு என்ற வாட்ஸ்அப் குழு மூலம் 38 மாவட்டங்களை சேர்ந்த 6802 காவல் நண்பர்களிடம் இருந்து உதவி தொகையாக பெறப்பட்ட

ரூ. 24, 25, 900/- தொகையினை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி ஆர் ஶ்ரீனிவாசன் தலைமையில் 2017 பேட்ச் காக்கும் உறவுகள் குழு நன்பர்கள் முன்னிலையில் பசுபதி மாரி குடும்பத்தினரிடம் மாவட்ட காவல் கண்காணிப் பாளரால் நேற்று ஒப்படைக்கப் பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி