தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நேற்று (27.12.2024) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல்கிஷோர் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட விவசாயிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.