தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

78பார்த்தது
தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தலைமையில் வருகிற இன்று 08ம் தேதி அன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வைத்து தென்காசி மாவட்ட வாக்குச் சாவடி முகவர்களின் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறுகிறது. அந்த பயிற்சி பாசறை கூட்டம் சிறப்பாக நடைபெறுவதற்கு முன்னோட்டமாக தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் வாக்குச் சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.  ஆலோசனைக் கூட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட தலைவருமான பழனிநாடார் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி மேலிட பார்வையாளர்கள் ரஞ்சன்குமார் மற்றும் பிரின்ஸ் எம். எல் ஏ. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாக பங்கேற்று வாக்குச் சாவடி முகவர்களுக்கு ஆலோசனை களை வழங்கி பேசினர். ஆலோசனைக் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம். பி. இராமசுப்பு, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் ஆயிரப்பேரி தி. உதயகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் முரளிராஜா மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாவட்டம்,   வட்டாரம், நகரம், பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கிராம கமிட்டி தலைவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி