தென்காசி மாவட்ட புத்தகத் திருவிழா

59பார்த்தது
தென்காசி மாவட்ட புத்தகத் திருவிழா
தென்காசி மாவட்டத்தில் 2 வது பொதிகை புத்தகத் திருவிழா  சங்கரன்கோவில் நகரில் நடைபெற்று வருகிறது. 50 புத்தக அரங்குகள் 10 அரசு

அலுவலக அரங்குகள் சுய உதவிக் குழுவினரின் கைவினைப் பொருட்கள், உணவு திருவிழா, புகைப்பட கண்காட்சி, புகைப்பட தனித்திறன் போட்டி, இல்லம் தேடி கல்வி, பாடநூல் கழகம் உள்ளிட்ட  அரங்குகளில் புத்தகத் திருவிழா 24. 12. 2023ல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்களும் பொதுமக்களும் புத்தக கண்காட்சியினை  கண்டும் புத்தகங்களை அதிகஅளவில் வாங்கி செல்கின்றனர்.  

மேலும் பள்ளி மாணவர் களுக்கு ஓவிய போட்டி, பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி, கதை எழுதும் போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

முன்னணி பட்டிமன்ற பேச்சாளர்களின் பட்டிமன்ற உரை இலக்கிய உரை எழுத்தாளர்களின் இலக்கிய உரை  உள்ளிட்டவையும் வில்லிசை, தமிழிசை, நாடகம் , கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

  பொது நூலக இயக்கத்தின் இணை இயக்குனர்  முனைவர் அமுதவல்லி நேற்று புத்தக கண்கட்சி யினை பார்வையிட்டு பள்ளி மாணவர்களுடன் உரையாடி இல்லம்தேடி கல்வி அரங்கினில் மாணவர்களின் திறமைகளை  உற்சாகப் படுத்தி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி