தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், மாறாந்தை சமுதாய நலக்கூடத்தில் மனுநீதி நாள் முகாம் நேற்று (மார்ச்.12) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல்கிஷோர் தலைமை தாங்கினார்.
முன்னோடி மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முகாமில் அரசு துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.