தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர். ஏ. கே. கமல் கிஷோர் தலைமையில் நேற்று
நடை பெற்றது.
கூட்டத்தில் பொதுமக்களிட மிருந்து 815 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார்.
தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் செயற்கை கால்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 06 மாற்றுத்திறனாளி களுக்கு தலா ரூ. 3. 500/- வீதம் ரூ. 21, 000/- மதிப்பிலான செயற்கை கால்ளையும், இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு ஈமச்சடங்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 15 நபர்களுக்கு தலா ரூ. 17, 000/- வீதம் ரூ. 255, 000/- க்கான நிதியுதவியினையும்,
வீரகேரளம்புதூர் தாலுகா அகரம் கிராம ஊராட்சியை சேர்ந்த 1 பயனாளிக்கு ரூ. 45, 000/-க்கான இலவச வீட்டுமனைப் பட்டா என மொத்தம் ரூ. 3. 21, 000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் வழங்கினார்.
மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 815 மனுக்கள் பெறப்பட்டது.
மனுதாரர்களுக்கு உரிய பதில் அளிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து துறை அலுவலர் களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்.