தென்காசி மாவட்டம், பாட்டாகுறிச்சி ஊராட்சியில் ரூ. 15 கோடி மதிப்பீட்டில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வரும் நிலையில் நேற்று அரங்கத்தின் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. கே. கமல் கிஷோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.