தென்காசி: விழிப்புணர்வு போட்டிகள்- ஆட்சியர் அறிவிப்பு

57பார்த்தது
தென்காசி: விழிப்புணர்வு போட்டிகள்- ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் போதைப் பொருள்களுக்கு எதிரான தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் கல்லூரி கல்வித் துறையும், கலால் துறையும், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களுக்கு எதிரான மாபெரும் வீடியோக்கள் / குறும்படங்கள் விழிப்புணர்வு போட்டிகளை அறிவித்துள்ளன. 

போட்டியில் வெற்றி பெறும் முதல் ஐந்து நபர்களுக்கு முறையே ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000, ரூ.5,000 மற்றும் ரூ.3,000 பரிசாக வழங்கப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, போட்டிக்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. 

வெற்றி பெறும் படைப்புகள் மாவட்ட நிர்வாகத்தால் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு மக்களிடையே பரவலாக கொண்டு செல்லப்படும் என்பதால், இளம் தலைமுறையினரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களும் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்குமாறு மாவட்ட ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். போட்டிக்கு படைப்புகளை அனுப்ப கடைசி நாள் - 17.01.2025 ஆகும்.

தொடர்புடைய செய்தி