தென்காசி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக அரவிந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து திருச்சி துணை கமிஷனராக பணியாற்றி வரும் அரவிந்த் தென்காசி மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.