தென்காசி: திருமலைக் குமாரசுவாமி கோவிலில் வருஷாபிஷேகம்

79பார்த்தது
தென்காசி: திருமலைக் குமாரசுவாமி கோவிலில் வருஷாபிஷேகம்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற  பண்பொழி திருமலை குமாரசாமி திருக்கோவிலில் 6ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. வருஷாபிஷேக விழா சிறப்பு ஹோம பூஜைகளுடன் துவங்கி மூலவர் விமானத்திற்கு புண்ணிய நீர் தெளிக்கப்பட்டு திருமலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் 
பூஜைகள் நடைபெற்றது.  

அதனைத்தொடர்ந்து சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.  மேலும் மாலையில்  தங்கத்தேர் வீதி உலாவும் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி