கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் திப்பணம்பட்டியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் முன்னிலையில் 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நேற்று திமுகவில் இணைந்தனர்.
கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், திப்பணம்பட்டியில் நேற்று நடைபெற்ற திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த முன்னாள் காவலர் பிரபாகரன் மற்றும் ராஜா, தேவராஜன், ஜெகன், இசைந்திரன், பிரவீன், கேசவன், ரஞ்சித், ரேடியஸ், பாரத், விமல், ராம்குமார், ரஞ்சித்குமார், பிச்சாண்டி, கார்த்திக், வினோத், ஜெபஸ்டின், மணிகண்டன், விஜிகுமார் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுக மாவட்ட பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் க. சீனித்துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குற்றாலம் டி. ஆர். கிருஷ்ணராஜா, துணை அமைப்பாளர் டி. கே. ராஜ், ஆலங்குளம் பேரூர் அமைப்பாளர் யாபேஸ் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.