செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அஇஅதிமுக அலுவலகத்தில் வைத்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி சுற்றுப்பயணத்தில் தென்காசி வடக்கு மாவட்ட வருகை குறித்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நேற்று (ஜூலை 5) நடந்தது. மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.எம். ராஜலெட்சுமி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் கண்ணன் (எ) ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.