தென்காசி: செங்கோட்டை அரசு பள்ளியில் முப்பெரும் விழா

71பார்த்தது
தென்காசி: செங்கோட்டை அரசு பள்ளியில் முப்பெரும் விழா
செங்கோட்டை மேலுார் மேலச்செங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் வைத்து பள்ளி துவங்கி நூறு ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் தமிழக அரசின் உத்தரவின்பேரில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரெஜினி ஆலோசனைப்படி நூற்றாண்டு விழா, விளையாட்டு விழா, பள்ளி ஆண்டுவிழா ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் ஜெயபிரகாஷ்ராஜன் தலைமைதாங்கினார். முன்னாள் தலைமைஆசிரியர் மாடசாமி, முன்னாள் ஆசிரியர் அருணாசலம் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் செண்பகவல்லி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

5ஆம் வகுப்பு மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். உதவி ஆசிரியர் தீபச்செல்வி அனைவரையும் வரவேற்று பேசினார். அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் மாணவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து விழாவை துவக்கி வைத்தனர். பின்னர் நூற்றாண்டு ஜோதியை முன்னாள் மாணவர் பிச்சைக்கனி ஏற்றி வந்தார். பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலெட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி ஆசிரியர் பர்வீன்மீரா நூற்றாண்டு விழா உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் முன்னாள் ஆசிரியர் சுப்ரமணியன், நூலகர் இராமசாமி, அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதியம்மாள் மலர்விழி, முன்னாள் மாணவர் ஆறுமுகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஜவஹர்லால் நேரு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி