ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், குத்தபாஞ்சான் ஊராட்சி காளத்திமடத்தைச் சேர்ந்தவர் அம்ரீஷா. ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இம்மாணவி நீட் தேர்வில் 603 மதிப்பெண் பெற்றுள்ளார்.
இம்மாணவியின் வீட்டிற்கு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் நேற்று நேரில் சென்று, மாணவியை திமுக சார்பில் பாராட்டி, ஊக்கத் தொகை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் தங்க செல்வம், மாவட்ட பிரதிநிதி அன்பழகன், இளைஞரணி அரவிந்த் திலக், சோனா மகேஷ், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி குமார், ஒன்றிய கவுன்சிலர் பசுபதி, ஆலங்குளம் வேளாண்மை குழு தலைவர் திராவிட மணி, கிளைச்செயலாளர் அன்பழகன்,
நிர்வாகிகள் ராஜமணி, அசோகன், அன்பழகன், டெய்லர் ஆறுமுகம், கிளைச் செயலாளர் செல்வம், குத்த பாஞ்சான் முன்னாள் ஊராட்சி செயலாளர் சேகர், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இம்மாணவி தந்தையை இழந்தவர் என்பதனால் அவரது கல்லூரி படிப்புக்கு உதவி செய்வதாக சிவபத்மநாதன் உறுதியளித்தார்.