கிளாங்காடு ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்

56பார்த்தது
கிளாங்காடு ஊராட்சியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்
கிளாங்காடு  ஊராட்சியில் 2023 - 2024. ஆம் ஆண்டு  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்டம், சம்பந்தமான சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று(செப்.28) நடைபெற்றது.

கிளாங்காடு ஊராட்சி பகுதியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்திற்கு கிளாங்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கொ. சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டப் பணியாளர்கள்,   பாரதப் பிரதமர் வீடு கட்டும் திட்ட பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சமூகத் தணிக்கை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட  பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீடு மற்றும் சுற்றுப்புறங்கள் பொது இடங்கள் மற்றும் ஊராட்சி பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்வோம் என பொது சுகாதாரம் குறித்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி