தென்காசியில் ரூ. 11. 64 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப் பாளர் அலுவலக திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
இதையொட்டி தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ் ஆர். ராமச்சந்திரன் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், திருநெல்வேலி மண்டல காவல்துறை துணைத்தலைவர் பிரவேஷ் குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தென்காசி பழனிநாடார், சங்கரன்கோவில் ராஜா, வாசுதேவநல்லூர் டாக்டர் சதன்திருமலைக்குமார், மாவட்ட காவல் துணை கண்காணிப் பாளர் நாகசங்கர்,
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்;பாளர் வே. ஜெயபாலன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, செல்லத்துரை, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், யூனியன் சேர்மன்கள் ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், தென்காசி சேக்அப்துல்லா, ஒன்றிய திமுக செயலாளர் அழகு சுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.