புளியங்குடி வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

56பார்த்தது
புளியங்குடி வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
புளியங்குடியில் கொலை முயற்சி வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்பப்பட்டார்.

தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய கொலை முயற்சி வழக்கின் குற்றவாளியான செந்தட்டியா புரம் காலனி தெருவை சேர்ந்த மருதநாயகம் என்பவரின் மகன் பிரவீன் குமார்(22) தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் அவர் மீது தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோருக்கு பரிந்துரை செய்தார்.

இதனை அடுத்து , மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் பிரவீன் குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி