தென்காசி பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கல்

68பார்த்தது
தென்காசி பள்ளியில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கல்
தமிழ்நாடு அரசின் சார்பில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில்  பள்ளி மாணவர் களுக்கு 14 வகையான விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது.

தென்காசி 13 வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் விலையில்லா பொருட்கள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தென்காசி மாவட்டக் கல்வி  (தொடக்கக் கல்வி) அலுவலராக பொறுப்பு வகிக்கும் கண்ணன் விழாவிற்கு தலைம தாங்கினார்.

தென்காசி வட்டாரக் கல்வி அலுவலர்கள் சண்முக சுந்தர பாண்டியன் மற்றும் இளமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் வின்சென்ட் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்டக் கல்வி அலுவலர் மாணவர்களுக்கு புத்தகங்கள், நோட்டுகள் மற்றும் கிரையான்ஸ் ஆகியவற்றை வழங்கினார்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கண்ணன்  பேசும் போது மாணவர்கள் கல்வி கற்பது மட்டுமன்றி ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கவேண்டும் என்று கூறினார்.

வட்டாரக் கல்வி அலுவலர் சண்முக சுந்தர பாண்டியன் பேசும் போது அரசின் நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கல்வியில்  முன்னேற வேண்டும் என்று கூறினார். ஆசிரியர் கௌசல்யா நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் எப்சிபா, விமலா, யாஸ்மின், தமிழ்ச்செல்வி, மாலையம்மாள் மற்றும் ராதா ஆகியோர் செய்திருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி