மோடி மீது மக்களுக்கு கோபம் தீரவில்லை : டாக்டர் கிருஷ்ணசாமி

75பார்த்தது
மோடி மீது மக்களுக்கு கோபம் தீரவில்லை : டாக்டர் கிருஷ்ணசாமி
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தென்காசியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்காசி மக்களவை தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட எனக்கு இரண்டு லட்சத்து 29 ஆயிரம் வாக்குகளை அள்ளித்தந்த வாக்காளர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் வரும் போகும். ஆனால் எனது மக்கள் பணியில் எந்த சுணக்கமும் இருக்காது. 2014, 2019, 2024 ஆகிய மக்களவை தேர்தல்களில் தமிழகத்தில் பாஜவிற்கு எதிராக வாக்களித்து இருப்பதாகவே தெரிகிறது. பிரதமராக மோடி வர வேண்டும் அல்லது வரக்கூடாது என்ற இரு விஷயங்கள் மட்டுமே வாக்காளர்கள் முன்பு இருந்தது.

அகில இந்திய அளவில் 3வது அணியை முன்னெடுக்க வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. மோடிக்கு எதிரான கருத்து ராகுலுக்கு ஆதரவான கருத்து இவற்றில் எது வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. 2026ம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் முடிவு வேறு விதமாக இருக்கும். மாற்றம் நிச்சயம் வரும்.  

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் 34 தலைமுறையாக அங்கு பணியாற்றி வருகின்றனர். அங்கு உள்ள 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை சட்ட விரோதமாக விருப்ப ஓய்வு கொடுக்க கட்டாயப்படுத்தி கையெ ழுத்து வாங்கி வருகின்றனர். இது சட்ட விரோதமானது. தொழிலாளர் நல சட்டங்களுக்கு எதிரானது. விருப்ப ஓய்வு கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்தி