10ம் வகுப்பு தேர்வில் சாதனை ஆக்ஸ்போர்டு பள்ளி 492 மதிப்பெண்கள்

1047பார்த்தது
10ம் வகுப்பு தேர்வில் சாதனை ஆக்ஸ்போர்டு பள்ளி 492 மதிப்பெண்கள்
பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எம். கார்த்திகா 492 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு எழுதிய 92 மாணவ, மாணவிகளும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவி எம். கார்த்திகா 500க்கு 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி முதலிடமும், தென்காசி மாவட்ட அளவில் சிறப்பிடமும் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-98, ஆங்கிலம்-99, கணிதம்-99 அறிவியல்-100, சமூக அறிவியல்-96. இப்பள்ளி மாணவி எஸ். மதுபாலா 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளி இரண்டாமிடம், பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-96, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-94. எஸ். பிரித்திநாயகி 486 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றார். இவர் பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் விபரம் வருமாறு: தமிழ்-96, ஆங்கிலம்-99, கணிதம்-95, அறிவியல்-98, சமூக அறிவியல்-98. இப்பள்ளியில் 3 பேர் கணிதத் திலும், 6 பேர் அறிவியலிலும் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மேலும் 480 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 27 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 42 பேரும் பெற்றுள்ளனர். சாதனைபடைத்த மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) இராமசுப்பு, ஆக்ஸ்போர்டு கல்வி குழும சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே. திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி. மிராக்ளின் பால் சுசி, பள்ளி தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கே. எஸ். கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி