உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தென்காசி மாவட்டத்தின் சார்பில் தென்காசி நிலைய அலுவலகத் தில் நேற்று நடைபெற்ற விழாவில் மாவட்ட அலுவலர் பானுப்பிரியா கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் விழாவை தொடங்கி வைத்தார்.
இதில் தென்காசி உதவி மாவட்ட அலுவலர் சுரேஷ் ஆனந்த் தென்காசி நிலைய உதவி மாவட்ட அலுவலர் பிரதீப் குமார் சிறப்பு நிலைய அலுவலர்கள் கணேசன், சே. ரத்தினகுமார், ஜெயபிரகாஷ், பாபு, மற்றும் அனைத்து பணியாளர்களும் தனித்தனியே மரக்கன்றுகளை நட்டனர்.
இந்த நிகழ்ச்சியினை தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை சிறப்பு நிலை அலுவலர் சு. கணேசன் தொகுத்து வழங்கினார்.