அமைப்புசாரா கட்டுமான சங்க ஆண்டு விழா

70பார்த்தது
அமைப்புசாரா கட்டுமான சங்க ஆண்டு விழா
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மாவட்ட அண்ணா பொதுத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா கட்டுமான பொதுநல சங்கத்தின் ஆறாம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது.  

விழாவிற்கு சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். ஆதம் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ எம் ரகுமான் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஓய்வு பெற்ற சங்கத் தலைவர் கே. சுப்பிரமணியன் சங்கம் வளர்ச்சி குறித்து பேசினார்.   இந்த சங்கத்தில் இன்னும் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். தொடர்ந்து பல நல்ல திட்டங்களை செயல்படுத்த ஆலோசனையும் கூறினார்.

 இவ்விழாவில் ஆதம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பாட்டாளி தொழிற் சங்க செயலாளர் என். கார்த்திகேயன் மற்றும் சிவில் சப்ளை ஊழியர்களான எஸ் குமார். ராமமூர்த்தி.   சுப்புராஜூலு தினேஷ். மைதீன். பொதுமக்களுக்கு சேர வேண்டிய பயன்கள் பற்றி  கூறினர்.

 இவ்விழாவில். மௌதம்மாள் பீவி மற்றும் அலுவலக ஊழியர்கள் ஜெயசித்ரா, சிவராணி. சுப்புலட்சுமி. உஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி மாவட்ட அண்ணா பொது தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா கட்டுமான பொது நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ எம் ரகுமான் நன்றி கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி