தென்காசியில்  இஸ்ரேலை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்பாட்டம்.

51பார்த்தது
தென்காசியில்  இஸ்ரேலை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்பாட்டம்.
பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் இனப்படுகொலை அட்டூழியத்தை கண்டித்து தென்காசியில் சிபிஎம் கட்சியின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட சிபிஎம் செயலாளர் உ. முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் நகர திமுக செயலாளரும், நகர்மன்ற தலைவருமான ஆர். சாதிர், நகர்மன்ற துணைத்தலைவர் கேஎன்எல். சுப்பையா, சிபிஐ சார்பாக சுப்பையா,   கிட்டப்பா, தமுமுக சார்பாக மாவட்ட தலைவர் யாக்கூப், விசிக சார்பாக சித்திக், இந்தியன் முஸ்லீம் லீக் சார்பில் முகம்மது அலி, மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு, மாவட்ட செயற்குழுவினர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தை முடித்து வைத்து கட்சி யின் மாநில குழு உறுப்பினர் கே. ஜி. பாஸ்கரன் பேசினார்.

தொடர்புடைய செய்தி