சட்ட விழிப்புணர்வு முகாம்: நீதிபதிகள் பங்கேற்பு

75பார்த்தது
திருநெல்வேலி முதன்மை மாவட்ட நீதிபதி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் எம். சாய்சரவணன் வழிகாட்டுதலின்படி தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி பி. ராஜவேல் தலைமையில் தென்காசி முதன்மை சார்பு நீதிபதி வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் ஜெ. கிறிஸ்டல் பபிதா முன்னிலையில் குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் திருநங்கை உரிமைகள் மற்றும் கேலிவதை தடுப்புச் சட்டம் 1997 பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

திருநங்கைகளை கேலி செய்யக்கூடாது. அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். புதிய மூன்று வகையான சட்டங்களில் ஆண் பெண் மற்றும் திருநங்கை என பாலின வகைப்பாடு குறிப்பிடப்பட்டு சம உரிமை அளிக்கப் பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு கல்வி கற்க வாய்ப்பு அளிக்கப் படுகிறது. அனைத்து துறைகளிலும் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது என நீதிபதிகள் பேசினர்.

முகாமில் தென்காசி முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜெ. ராஜேஷ்குமார், தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி எம். பொன் பாண்டி, தென்காசி வட்ட சட்ட பணிகள் குழு வழக்கறிஞர்கள் வேல்பாண்டி, மரகதம், முத்துக்குமார், சசிகுமார், ஜெபா, செல்வகுமார், சத்யா, ரஹ்மத் பாசானா, மாரி லட்சுமி, மாவட்ட சமூக நல அலுவலர் மதிவதனா , சகி ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி ஜெயராணி, கல்லூரி பேராசிரியர்கள், கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி