தென்காசி தெற்கு மாவட்டம், கடையம் வடக்கு ஒன்றியம், சேர்வைக்காரன்பட்டி கிராமத்தில் மிகவும் குறைந்த அழுத்த மின்சாரம் இருந்ததால் பள்ளி குழந்தைகள் படிப்பதற்கு சிரமப்படுவதாக ஊர் பொதுமக்கள் முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட
திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்ம நாதனிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர் சம்பந்தப்பட்ட மின்சாரத் துறை உயர் அதிகாரிகளிடம் பேசி உடனடியாக சேர்வைக்காரன் பட்டிக்கு உயர் மின்னழுத்தம் தொடர்ந்து கிடைத்திட ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து சேர்வைக்காரன் பட்டி ஊர் நாட்டாண்மை சேர்மக்கனி தலைமையில் வேல்ச்சாமி, சுந்தர்ராஜ், நடராஜன், அட்மா சேர்மன் குணசீலன் , ஒன்றிய கவுன்சிலர் சங்கர், லட்சுமணன், விடியல் ஆர்த்தி உள்ளிட்டோர் தென்காசி முன்னாள் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதனை நேற்று நேரில் சந்தித்து
பள்ளி குழந்தைகள் பயிலவும், பொதுமக்களும் பயன்பெறக் கூடிய வகையிலும் உயர் அழுத்த மின்சாரம் நிரந்தரமாக பெற்றுத் தந்ததற்கு பாராட்டி நன்றி தெரிவித்துக்கொண்டனர்.