தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட
ரூ. 40 லட்சம் மதிப்பிலான நலத்திட்டங்களை பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா நேற்று அர்ப்பணித்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கடையநல்லூர் நகரத்திற்கு உட்பட்ட 3, 4, 27 ஆகிய மூன்று வார்டு பொதுமக்கள் கோரிக்கையினை ஏற்று ரூ. 24, 30, 000 மதிப்பீட்டில் தனித்தனியாக மூன்று நியாய விலைக் கடைகள்,
மேலக்கடையநல்லூரில் ரூ. 8, 10, 000 மதிப்பில் நன்மைக்கூடம்
மற்றும் கடையநல்லூர் ஒன்றியம் சொக்கம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு 6 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட பேருந்து நிழற்குடை ஆகியவை என மொத்தம் ரூ. 40, 40, 000 மதிப்பிலான நலத்திட்டங்கள் நிறைவு பெற்றன.
இதனை அடுத்து நலத்திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கு, நேற்று
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.
இதில் 3வது வார்டு நியாய விலைக் கடையினை கடையநல்லூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை வைத்து திறந்து வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட அதிமுக துணை செயலாளர் பொய்கை சோ. மாரியப்பன் , நகர செயலாளர் எம். கே. முருகன், கடையநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துபாண்டியன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.