தென்காசி ஜெ. பீ பொறியியல் கல்லூரியில் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையின் சார்பாக 12-வது தேசிய கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது.
இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
சிறப்பு விருந்தினர்களாக நாகர்கோவிலை சேர்ந்த ATS எலக்ட்ரோ டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷாஜி, சோகோ வை சார்ந்த மென் திறன் பயிற்சியாளர் மெஜில்லா, முன்னாள் மாணவர்கள்
விஜய் கணேஷ், பாலசுப்பிரமணியன், பிரின்ஸி, மெல்சியா கலந்து கொண்டனர்.
துறையின் தலைவர் முனைவர் ஜெயலட்சுமி சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். கருத்தரங்கின் நிகழ்ச்சிகளாக பல்வேறு போட்டிகளும் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் படைப்புகள் மற்றும் ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி நிர்வாகி ஹேம்லட் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாவின் ஒருங்கிணைப்பாளர் ஜாபேஸ் கிருபா மற்றும் துறையின் பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் செய்திருந்தனர்.