சுந்தரபாண்டியபுரத்தில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு

162பார்த்தது
சுந்தரபாண்டியபுரத்தில் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூர் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு பேரூர் காங்கிரஸ் தலைவர் முப்பிடாதிபாண்டியன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான சு. பழனிநாடார் காங்கிரஸ் அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் தி. உதய கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். விழாவில் ஊத்துமலை இளைய ஜமீன் முரளிராஜா, சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், காங்கிரஸ் மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ், டாக்டர் சங்கரகுமார், செங்கோட்டை முன்னாள் யூனியன் சேர்மன் சட்டநாதன், வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், மாநில பேச்சாளர் ஆலடிசங்கரையா, பால்துரை மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி யன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி