காடுவெட்டியில் அங்கன் வாடி கட்டிடம்  திறப்பு

73பார்த்தது
காடுவெட்டியில் அங்கன் வாடி கட்டிடம்  திறப்பு
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காடுவெட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 13. 57 இலட்சம் மதிப்பீட் டில் புதிதாக கட்டப் பட்டுள்ள அங்கன்வாடி மைய திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திவ்யா மணிகண்டன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே. ஜெயபாலன் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் செல்லத்துரை, காடுவெட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துலெட்சுமி மருது பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்துமாரி ரமேஷ், முருகேஸ்வரி பாலகுமார்,

கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன் பாண்டியன் உட்பட கழக நிர்வாகிகள், கிளை கழக செயலாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி