தென்காசி, குற்றாலம் பகுதியில் சாரல் மழை தீவிரம்

73பார்த்தது
தென்காசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு சாரல் மழை பொழிந்தது. குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த சாரல் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று காலையில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது மீண்டும் தென்காசி குற்றாலம் பகுதியில் சாரல் மழை பொழிந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் குளுகுளு நிலைமை நீடித்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர் சாரல் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்தி