பாவூர்சத்திரம் எம். எஸ். பி. பழைய மருத்துவமனை வளாகத்தில் பிறவி இதய நோய் உள்ள குழந்தைகளுக் கான இலவச சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தமிழக அரசின் குடும்ப நலத்துறை , சென்னை எம். ஜி. எம். மருத்துவமனை, மதுரா பவுண்டேசன், ஐஸ்வர்யா டிரஸ்ட் இணைந்து நடத்திய பிறவி இதய நோய் உள்ள குழந்தைகளுக்கான இலவச சிகிச்சை முகாம் பாவூர்சத்திரம் எம். எஸ். பி. பழைய மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் உத்தரவின் பேரிலும், மருத்துவ பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன் அறிவுறுத்தலின் பேரிலும், கீழப்பாவூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் மேற்பார்வையில் நடைபெற்ற இம்முகாமினை எம். எஸ். பி. வி. எல். உரிமையாளர் லட்சுமி ஆனந்த் தொடங்கி வைத்தார்.
இதய நோய் சிறப்பு மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையி லான மருத்துவக்குழுவினர் பிறந்த குழந்தை முதல் 18 வயதுடைய 181 சிறுவர், சிறுமிகளுக்கு எக்கோ, இ. சி. ஜி. மற்றும் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.
இதில் அறுவை சிகிச்சை தேவையென கண்டறிப்பட்ட 29 சிறுவர், சிறுமிகளுக்கு சென்னை எம். ஜி. எம். மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.
முகாமில் ஸ்டார் பேக்கரி உரிமையாளர் சிவன் பாண்டியன், மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.