கொல்லம் - தென்காசி - விருதுநகர் - சென்னை ரயில் பாதை 100 % மின் மயமாக்கல் பணிகள் நிறைவடைந்து. 16102 கொல்லம் - சென்னை ரயில் முழுவதும் மின்சார ரயில் என்ஜின் கொண்டு நேற்று இயக்கப்பட்டது.
செங்கோட்டை இரயில் நிலையத்தை வந்தடைந்த மின்சார இரயிலை நகர வர்த்தக சங்க தலைவரும், தி. மு. க தலைமை பொதுக்குழு உறுப்பினருமான எஸ். எம். ரஹீம், இரயில் பயணிகள் நலச் சங்க நிர்வாகிகள் வரவேற்றனர்.
மின்சார என்ஜின் இரயில் இயக்கத்தினால் இனி வரும் காலங்களில் அதிகப்படியான இரயில்கள் இயக்கப்படுவதற் கான வாய்ப்புகள் உள்ளது.