தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காத மத்திய பாஜக அரசை கண்டித்து தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் தென்காசியில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்டதிமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ராஜா எம்எல்ஏ ஆகியோர் தலைமை தாங்கினர்.
தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார் முன்னிலை வகித்தார்.
இதில் முன்னாள் அமைச்சர் ச. தங்கவேலு, தலைமை தீர்மானக் குழு உறுப்பினர் ப. ஆ. சரவணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செல்லதுரை, முத்துப்பாண்டி, ஆறுமுகச்சாமி, சேக் தாவூது,
மாவட்ட திமுக அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், மாவட்டத் துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், கென்னடி, வழக்கறிஞர் கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப்,
ஒன்றிய செயலாளர்கள் தென்காசி மேற்கு திவான் ஒலி, தென்காசி கிழக்கு அழகுசுந்தரம், செங்கோட்டை ரவிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.