அவ்வையார் மகளிர் பள்ளியில் நோட்டு, புத்தகங்கள் வழங்கல்

81பார்த்தது
அவ்வையார் மகளிர் பள்ளியில் நோட்டு, புத்தகங்கள் வழங்கல்
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் கோடை விடுமுறைக்கு பின்னர் நேற்று (திங்கள்கிழமை) திறக்கப்பட்டது. பாவூர்சத்திரம் அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் நாள் பள்ளிக்கு வந்திருந்த மாணவ, மாணவிகளை இனிப்பு வழங்கி பள்ளி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடபுத்தகங்கள் மற்றும் நோட்டுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கீழப்பாவூர் யூனியன் சேர்மன் சீ. காவேரி சீனித்துரை கலந்து கொண்டு, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரா. சாக்ரடீஸ், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சரண்யா மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி நன்றி கூறினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி