ஆலங்குளம் அருகேயுள்ள கடங்கநேரி சரஸ்வதி வித்யாலயா தொடக்கப்பள்ளியில் நண்பர்கள் குழு சார்பில் பள்ளி மாணவர் களுக்கு சீருடை மற்றும் காலணிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
பள்ளி நிர்வாகி ஓய்வு பெற்ற ஆசிரியர் துரைராஜ் தலைமை வகித்தார். நண்பர்கள் குழு ஹரிஹரசுதன், எல்ஐசி மதி, தெற்கு மாவட்ட
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் எஸ். ஏ. அய்யம் பெருமாள், செல்வம், மாடசாமி, பாலகிருஷ்ணன், பிரேம், பவுன்ராஜ், பவுன்துரை, துரைராஜ், முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் அசோக் வரவேற்று பேசினார்.
தென்காசி தெற்கு மாவட்ட
திமுக முன்னாள் செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 65 மாணவர்களுக்கு சீருடை, 30 கால்பந்து விளையாடும் மாணவர்களுக்கு காலணிகளை வழங்கி பேசினார்.
இவ்விழாவில் ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால், ஒன்றிய துணைச் சேர்மன் ராஜாமணி, ஆலங்குளம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தங்கசெல்வம், கீழக்கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகர், மேல கலங்கல் ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார்,
ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேஸ்வரி பாலகுமார், முத்துமாரி ரமேஷ், அந்தோணி சாமி, சங்கர், ஆலங்குளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் சுந்தர், ராஜதுரை கடங்கநேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் லட்சுமணன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தட்டப்பாறை கணபதி, மாவட்ட விவசாய அணி துணைத் தலைவர் இட்லி செல்வன், மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெயசிங்,
சுரண்டை நகர இளைஞரணி அமைப்பாளர் முல்லை கண்ணன், ஆலங்குளம் இளைஞர் அணி அரவிந்த் பாண்டியன், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்யராஜ், அன்பழகன், முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் காவலாக்குறிச்சி ரவிச்சந்திரன், வென்றிலிங்கபுரம் சிவா, பூதத்தான், ஆலங்குளம் துரை, ஏ. பி. என். குணா, ராஜபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் நண்பர்கள் குழு தலைவர் ஹரிஹரசுதன் நன்றி கூறினார்