குற்றாலம் ரோட்டரி கிளப்பின் 3212 ன் கவர்னர் முத்தையா பிள்ளையின் ஆய்வுக் கூட்டம் ரோட்டரி சர்வீஸ் சென்டரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கார்த்திக் இறைவணக்கம் வாசித்தார். செயலர் சைரஸ் அறிக்கை வாசித்தார். 11 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தென்காசி கிழப்புலியூர் பகுதியைச் சேர்ந்த நல்லாசிரியர் கை. கணேச மூர்த்தியின் பேரன் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்ரீ வசந் கணேஷ் கண்களில் பிளாக் போல்டர் போட்டு கொண்டு, ஆளுநர் கேட்ட கேள்விகளுக்கு கலர் பென்சில்களை கேட்டார், அடுத்து படங்களை காண்பித்தும், வாசிக்க சொல்லியும், பின்பு ரூபாய் நோட்டுகளை கொடுத்து எவ்வளவு ரூபாய் என கேட்டும் அதிலுள்ள நம்பரையும் சொன்னதை கேட்டு பாராட்டி பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வில்லுப்பாட்டில் 1000 நிகழ்ச்சியை தாண்டிய மாரியம்மாள், ஸ்கேட்டிங்கில் யுனிவர்சல் புக் ஆப் ரிக்கார்டில் உலக சாதனை படைத்த மகாதேவ் யாதவ்,
சுகாதார மேற்பார்வையாளர் துரைச்சாமி, ஊழியர் செல்வராஜ், தானாக முன்வந்து டிராபிக் பணியை மேற்கொள்ளும் முகமது முஸ்தபா, குற்றாலம் காவல் துறை செந்தில்குமார், ரத்ததானம் செய்யும் அரசு நடத்துனர் நாராயணன், அய்யப்பன், இலவசமாக ஓவியம் வர்ணம் தீட்டுதல் கற்பிக்கும் முருகையா, ஹோம் கார்டு மாரிமுத்துக்கும் சிறந்த சேவைகளை பாராட்டி சான்றிதழ் வழங்கப்பட்டது.