தென்காசி ஐசிஐ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் நாட்டு நல பணித்திட்ட சிறப்பு முகாம் துவக்க விழா நேற்று நடைபெற்றது.
முதல் நிகழ்வாக போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமையேற்று தென்காசி நகர்மன்றதலைவர் சாதிர் மற்றும் துணைத் தலைவர் கே என் எல் எஸ் சுப்பையா ஆகியோருடன் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து தென்காசி ரோட்டரி கிளப் மகாலில் வைத்து நடைபெற்ற துவக்க விழாவில் குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவர் கை. முருகன் மற்றும் அழகராஜா, சுரேஷ், கணேசமூர்த்தி, திருஇலஞ்சி குமரன், வழக்கறிஞர் கார்த்தி குமார், சைரஸ், சந்திரன் பிரகாஷ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் மற்றும் தென்காசி காவல்துறை உதவி ஆய்வாளர் முருகேஸ்வரி மற்றும் காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் வைகுண்டசாமி மற்றும் செங்கோட்டை எஸ் எம் எஸ் எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி திட்ட அலுவலர் முருகன் செய்திருந்தனர்.