ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம், நல்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) விஜயசெல்வி தலைமை வகித்தார். வட்டாட்சியர் ஓசன்னா பெர்ணான்டோ, வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய கவுன்சிலர் ஆலடி எழில்வாணன் வரவேற்றார்.
ஆலங்குளம் யூனியன் சேர்மன் எம். திவ்யா மணிகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முகாமினை தொடங்கி வைத்து பேசினார்.
நல்லூர், மாயமான்குறிச்சி, மாறாந்தை, சிவலார்குளம் ஆகிய ஊராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை 16 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு பெற்றனர்.
முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சிம்சன், வள்ளியம்மாள், பால்தாய், மீனா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.