தியாகி இமானுவேல் சேகரனின் 100வது பிறந்த தினத்தையொட்டி, நேற்று தென்காசி தெற்கு மாவட்ட
திமுக சார்பில், மாவட்ட கழக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இமானுவேல் சேகரன் உருவப்படத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் கடையம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டியன், செயற்குழு உறுப்பினர் சேக்தாவூது, துணை செயலாளர் கென்னடி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ்,
மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், தகவல் தொழில் நுட்ப அணி துணை அமைப்பாளர் ஸ்ரீதர், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சிவகுமார், கிருஷ்ணராஜ், இளைஞரணி கோமு, குணரத்தினம், பழனிச்சாமி, கணேசன், வெல்டிங் மாரியப்பன், ராம்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.