பாவூர்சத்திரம் ரயில் நிலைய 122வது பிறந்த தின விழா நேற்று கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
1903 ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி மீட்டர் கேஜ் பாதையாக தொடங்கப்பட்ட பாவூர்சத்திரம் ரயில் நிலையத்தின் 122 வது பிறந்தநாள் விழா பொதுமக்கள் சார்பில் நேற்று (வியாழக்கிழமை) கொண்டாடப்பட்டது.
இதையொட்டி பாவூர்சத்திரம் ரயில் நிலையம் பலூன்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
ரயில் நிலைய வளாக பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பாவூர்சத்திரம் தொழிலதிபர் சேவியர்ராஜன் தலைமை வகித்தார்.
பாவூர்சத்திரம் கண் தான விழிப்புணர்வு குழு தலைவர் கே. ஆர். பி. இளங்கோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தென்காசி எம். எல். ஏ. பழனிநாடார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ரயில் என்ஜின் வடிவிலான கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினார்.
விழாவில் மாவட்ட கவுன்சிலர் சாக்ரடீஸ், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் பாண்டியன், கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் பாண்டியன், ஜேசு ஜெகன், பாவூர்சத்திரம் அரிமா சங்க தலைவர் ஆனந்த், பொருளாளர் ஜேக்கப் சுமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர் பாண்டியராஜா நன்றி கூறினார்.