மடத்தூரில் 49வது மாநில அளவிலான கைப்பந்து போட்டி

52பார்த்தது
மடத்தூரில் 49வது மாநில அளவிலான கைப்பந்து போட்டி
பாவூர்சத்திரம் அருகேயுள்ள மடத்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசித் திரு விழாவையொட்டி எஸ். கே. பி. குத்தாலிங்கம் நினைவு 49 வது மாநில, மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நேற்று நடைபெற்றது.

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  முதல் போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீசன், மாவட்ட பிரதிநிதி சமுத்திரபாண்டி , மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் இட்லிசெல்வன்,

கல்லூரணி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார், மாவட்ட பிரதிநிதி ஸ்டீபன் சத்தியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் கன்னியா குமரி கே. கே. பிரதர்ஸ் அணி முதல்பரிசும், ஆலடிபட்டி சிவகாமிபுரம் அணி 2வது பரிசும், பெரியகண்ணுபட்டி எம். எஸ். ஏ. அணி 3வது பரிசும், மடத்தூர் எம். வி. சி. அணி 4வது பரிசும் பெற்றன.

விழாவில் இந்து நடு நிலைப் பள்ளி தலைமைஆசிரியர் கதிர்வேல் முருகன், திமுக நிர்வாகிகள் கதிரேசன், முத்து, ஜெயசிங், சுப்பிரமணியன், முருகன், இராதாகிருஷ்ணன், கண்ணன், மாரியப்பன் மற்றும் கைப்பந்து குழு நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி