தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் ஆறுமுகசாமி தலைமை யிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த சிவகிரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிள்ளையார் என்பவரின் மகன் சீனிவாசன் (77) , தேவிபட்டினம் காமராஜ் தெருவை சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் முருகன் (35) ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 மதுபான பாட்டில்கள் மற்றும் ரூபாய் 400 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில் களை விற்பனை செய்து கொண்டிருந்த சொக்கம்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்த முருகையா என்பவரின் மகன் குமார் (43) என்ற நபரை சார்பு ஆய்வாளர் உடையார்சாமி கைது செய்து அவரிடம் இருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 15 மது பாட்டில்கள் மற்றும் ரூபாய் 250ஐ பறிமுதல் செய்தார்.