தென்காசி அருகே உள்ள கொட்டாகுளம் நாடார் தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து இவரது மகன் தங்ககுமார் ( வயது 30). இவர் நேற்று முன்தினம் தனது மனைவியிடம் செலவுக்கு பணம் பெற்றுக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.
பின்னர் ஐந்தருவி சாலையில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த தங்ககுமார் இரவு 7 மணி யளவில் மனைவியிடம் செல்போனில் பேசியுள்ளார். அதன் பிறகு அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
நேற்று தனியார் விடுதியின் ஊழியர்கள் ஜன்னல் வழியாக பார்த்த போது தங்க குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இது பற்றி போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குற்றாலம் போலீசார் தங்ககுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துவரங்காடு கிராமத்தை சேர்ந்த தங்கத்துரை என்பவரது மகன் சிவா (வயது 18) பழைய
குற்றாலம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சில மாதங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குற்றாலத்தில் ஒரே நாளில் இரண்டு நபர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.