இரட்டை இலை சின்னத்தில் மரு. கிருஷ்ணசாமி வாக்கு சேகரிப்பு

80பார்த்தது
தென்காசி பாராளுமன்ற தொகுதியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரும்,
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்.
K. கிருஷ்ணசாமி சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருவிகுளம் சுற்று வட்டார பகுதிகளான ஆலங்குளம், பழங்கோட்டை, நாலுவாசன்கோட்டை, திருவேங்கடம், பெருங்கோட்டூர் உள்ள பல்வேறு கிராமங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்தால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டமான 100 நாள் வேலையை 150 நாள் வேலையாக மாற்றுவதற்கு பாராளுமன்றத்தில் முதல் ஆளாக குரல் கொடுப்பேன் என்றும் தென்காசி பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக தொழிற்சாலைகளை கொண்டு வருவேன் என்றும் வாக்கு சேகரித்தார்.

மேலும் இந்த வாக்கு சேகரிப்பின் போது முன்னாள் அமைச்சர் வி. எம். ராஜலட்சுமி மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி