பாவூர்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூர் தமிழர் தெருவில் அமைந்துள்ள ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா கடந்த 12ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக நாளான நேற்று (ஞாயிறு) காலை 7 மணிக்கு புண்யாகவாசனம், நித்யஆராதனை, மூர்த்திஹோமம், பூர்ணாஹுதி, விசேஷதானம், யாத்ரைதானம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம், விசேஷஆராதனை, சாத்துமுறை, தீர்த்தம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு ருக்மணிகல்யாணம், இரவு 8 மணிக்கு கருடசேவையும் நடைபெற்றது.
இக்கும்பாபிஷேகவிழாவில் டாக்டர்கள் தர்மராஜ், குணசேகரன், ராஜசேகரன், அரிச்சந்திரராஜா, அழகேசன், கோதண்டராமன், சுந்தரம், மகேஸ்வரி, நிகிலா, முன்னாள் தென்காசிதெற்கு மாவட்ட திமுகசெயலாளர் வக்கீல் பொ. சிவபத்மநாதன், முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி. பிரபாகரன் மற்றும் சுற்றுவட்டாரபகுதிகளைச் சேர்ந்த ஏராளமானபக்தர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை இந்துசமயஅறநிலையத்துறை செயலாலுவலர் பொன்னி, ஆய்வாளர் சேதுராமன், கணக்கர் பொன்னையா, ரவிபட்டாச்சாரியார் மற்றும் ஸ்ரீராம்பஜனைமண்டலியினர், ஸ்ரீசாம்ராஜ்யலட்சுமிநரசிம்மபீடத்தினர், பக்தர்கள், உபயதாரர்கள் செய்திருந்தனர்.