தென்காசி மாவட்டம் புளியரையிலிருந்து இருசக்கர வாகனத்தை திருடி கேரளா மாநிலம் அஞ்சல் பகுதிக்கு கொண்டு சென்ற மூன்று நபர்களை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் அறிவுரையின்படி புளியரை காவல்துறை உதவி ஆய்வாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான குழுவினர் நேற்று கைது செய்தனர். வாகனங்களை மீட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புளியரையில் காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா குற்றவாளிகளை கைது செய்ய மிகவும் உதவியுள்ளது.